தமிழ்நாடுபாஜகவின் தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டநிலையில், தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து, அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதேபோல் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் மக்கள் ஆசி யாத்திரையிலும் கலந்துகொண்டார். இந்நிலையில், நெல்லையில் கரோனாவிதிமுறைகளைமீறியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 95 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரப்பும் வகையில் கூட்டத்தைக் கூட்டியதாக பாஜக அண்ணாமலை உட்பட 95 பேர் மீது பாளையங்கோட்டைபோலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.