கரூர் புதிய மாவட்டமாக உதயமான பிறகு தாந்தோன்றிமலை, வெள்ளியணைக்கு இடையே இருந்த கோயில் நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களை அப்போதைய அரசு நிர்வாகம் பெருந்திட்ட வளாகம் அமைக்க கையகப்படுத்தியது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள்கட்டப்பட்டன. இந்த நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிலம் அளித்த சிலர் இழப்பீடு போதவில்லை என்றும், சிலர் நிலத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுவுடன் கோர்ட்டின் உதவியை நாடினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thasil.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் பைபாஸ் சாலை பகுதியில் 6.75 ஏக்கர் நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த இடத்தில் ஒன்றரைஏக்கர் நிலத்தை தனியார் ஒருவருக்கு கரூர் வருவாய்த்துறையினர் சப்டிவிசன் செய்து பட்டா வழங்கியுள்ளதாக கரூர் கலெக்டர் அன்பழகனுக்கு தகவல் கிடைத்தது.
கலெக்டர் உத்தரவின் பேரில் கரூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி அதை ஊர்ஜிதம் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் அமுதா தலைமை நில அளவையர் சாகுல் அமீது, வட்ட நில அளவையர் சித்ரா என மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ, கரூர் மாவட்ட குற்றப்பிரிவிடம்புகார் அளித்தார். இந்தப் புகாரில் 1998 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சர்வே எண் 148, 779, 786, 783, 784, 748, 790, 793, 797, ஆகிய நிலங்களை கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்காக ஆர்ஜிதம் செய்து அதற்கான இழப்பீடு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் தாசில்தார் அமுதா, தலைமை நில அளவையர் சாகுல் அமீது, நில அளவியல் சித்ரா ஆகியோர் சர்வேஎண் 793 பட்டா, சிட்டா ஆகியவற்றை சரவணன் மற்றும் முருகானந்தம் என்பவருக்கு அளித்துள்ளனர் . எனவே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் மீது எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் கரூர் போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)