Advertisment

நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும்... மாற்றுத்திறனாளி சங்கத்தினர் புகார்!

Case filed on kushboo

Advertisment

‘காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சிஇல்லாத கட்சி’ என நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த பின்னர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

குஷ்பு தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்கு அவர் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளும், கருத்தும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்துகிறது. எனவே ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி உள் நோக்குடன் மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த குற்றத்திற்கு 5 முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே நடிகை குஷ்பு மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். என பொள்ளாச்சி நகர கிழக்கு ஸ்டேசனிலும், கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுத்து இருக்கிறார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் சங்கம் சார்பில் மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம்.

kushboo
இதையும் படியுங்கள்
Subscribe