Skip to main content

ரயில் தீ விபத்து; உ.பி சுற்றுலா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

case filed against  UP Tourism company train fire accident

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்தது. 

 

இந்த நிலையில், இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து உ.பி மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தென்னக ரயில்வே காவலர் வழக்குப் பதிவு செய்ய லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணிகளை ரயிலில் அழைத்து வந்த  தனியார் சுற்றுலா நிறுவனம், ரயிலில் என்னென்ன பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்கிறோம் என்றும், ரயில்வேவின் விதிமுறைப்படி தடை செய்யப்பட்ட பொருட்களை எதுவும் ரயிலில் எடுத்து போகப்போவதில்லை என்று தெரிவித்து சான்றிதழை பெற்றுத்தான் லக்னோவிலிருந்து பயணிகளை அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக சிலிண்டர் எடுத்து வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி முதற்கட்டமாக நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம்; பேச்சுவார்த்தை தோல்வி!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Kappalur tollgate issue; Negotiation failure

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்ததை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தியது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகச் சென்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே சமயம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன் அமர்ந்து பழைய முறையே தொடரும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். அதே சமயம் போராட்டக்காரர்களைக் கலைக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டனர். 

Kappalur tollgate issue; Negotiation failure

இதற்கிடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வரும் திங்கட்கிழமை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாகப் போராட்டக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (15.07.2024) நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை, திருமங்கலம் நகராட்சி மக்கள், என அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரியும், உள்ளூர் மக்களுக்கு 100 சதவீதம் கட்டண விலக்கு அளிப்பது தொடரான விவகாரத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

Next Story

‘பயணிகளின் கவனத்திற்கு’ - மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
'Attention of passengers'- change in Chennai electric train service!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூரில் இருந்து நாளை (14.07.2024) இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில் பயணிகள் நலன் கருதி சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நாளை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (14.07.2024) தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

'Attention of passengers'- change in Chennai electric train service!

பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.