ரகர

Advertisment

கரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேருதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் உள்ளிட்ட 25 பேர் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழா ஒன்றை கொண்டாடுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ள நிலையில், காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் பொள்ளாச்சி ஜெயராமன் மீதுவழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

கரோனா கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில் அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது பொதுப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள நிலையில்,காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.