பட்டாசு ஆலையின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Case filed against the owner of the firecracker factory in 3 sections!

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள காத்தாலம்பட்டியில் பெரிய கருப்பனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ரசாயன மூலப்பொருட்களைக் கலவைச் செய்யும் போது, திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு பணியில் இருந்த விக்னேஷ் என்ற இளைஞர், நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

விபத்தில் பட்டாசுத் தயாரிப்பு அறைதரைமட்டமானது. இது குறித்து தகவலறிந்துசென்ற தீயணைப்புத்துறையின் வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பாக, பெரிய கருப்பன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஏழு வெடி விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

incident viruthunagar
இதையும் படியுங்கள்
Subscribe