Case filed against Minister SB Velumani!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (06.04.2021) நடந்து முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு அதிமுககொடி, அதிமுக துண்டுடன் வந்த புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல தேர்தல் அலுவலர் ராஜா முகமது கொடுத்த புகாரின் பேரில், கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு முன்னதாக நேற்று, கோவையில் பரப்புரை முடிந்தும் ஆதரவாளர்களுடன் கூடியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செல்வபுரத்தில் ஆதரவாளர்களுடன் கூடியதால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு அதிமுககொடி, அதிமுக துண்டுடன் வந்த புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment