Advertisment

அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு!

kadambur raju

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜு, இவர்செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ளார். இந்தமுறை கோவில்பட்டி தொகுதியில் அவர் போட்டியிட இருக்கிறார். மூன்றாவது முறையாக கோவில்பட்டி தொகுதியில் அவர் களம்காண இருக்கிறார். தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் ஒவ்வொரு வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுஅவரதுஆதரவாளர்களுடன்சென்ற காரை வழிமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து சோதனையிட்டுள்ளார்.

Advertisment

அதேபோல் இன்னொரு முறையும் கடம்பூர் ராஜூன் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து ஆய்வு செய்தார்.இதனால் திட்டமிட்டு தங்கள் காரை ஆய்வு செய்வதாக கடம்பூர் ராஜு புகார் தெரிவித்திருந்தார். அதேபோல்மாரிமுத்துவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 'என்னுடைய சோதனைக்கு இடம் தரவில்லை;முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சோதனை செய்த அதிகாரி மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.

admk case kadampurraju minister police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe