Case filed against Kanimozhi's election victory - final hearing today in the Supreme Court!

Advertisment

தி.மு.க. எம்.பி. கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தடைகோரிய வழக்கில் இன்று (22/08/2022) உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது.

தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் கனிமொழி எம்.பி., வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இன்றே இறுதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ் அமர்வில் இன்று நடைபெறுகிறது.