பணமோசடி செய்ததாக கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் சித்தூர்வரதபாளையத்தில்உள்ள கல்கி ஆசிரமத்தில் கடந்த 16 ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்களாகவருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கல்கி ஆசிரமம்500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில்கணக்கில் வராதநகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 Case filed against Kalki saint

சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கோவர்தனத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர்சோதனையில் இறங்கிய நிலையில் கணக்கில் வாராத43.9 கோடி ரூபாய் இந்திய பணம், 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்கம், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கல்கி சாமியார் விஜயகுமார் மற்றும்அவரது மகன் கிருஷ்ணன் மீது 100 கோடி வரை பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் 85 கோடியைஹவாலா மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.