/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ARJUN444.jpg)
கோவை மாநகர் மாவட்ட காவல்துறை இன்று (17/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 07/11/2021 ஆம் தேதியன்று, இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, 'தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேற்படி பதிவானது அமைதி மீறுதலைத்தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே இது தொடர்பாக இன்று 17/11/2021 ஆம் தேதி அன்று, பி1 கடைவீதி காவல் நிலைய குற்ற எண் - 633/2021, U/s 504, 506 (i) IPC- ன் படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)