/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_11.jpg)
மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளித்திருந்தார். அதில், “வீட்டின் அடமான விவகாரத்தில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஆபாசமாகப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக நுழைதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)