Advertisment

பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு! 

Case filed against 10 MLAs including Pollachi Jayaraman!

Advertisment

நேற்று (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள்மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

Case filed against 10 MLAs including Pollachi Jayaraman!

இந்நிலையில், இந்த சோதனையைக் கண்டித்து வேலுமணியின் ஆதரவாளர்கள், அதிமுகவினர் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எம்எல்ஏ விடுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் இருத்தல்,நோயைப் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை குனியமுத்தூரில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள்உட்பட அதிமுகவினர்500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

velumani admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe