Advertisment

சைக்கிள் பேரணி சென்ற திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு!

 case on DMK MLA who goes on bicycle rally

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு முன்னோட்டமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் திமுக கட்சியினர் ஆங்காங்கே திமுக கொடி கட்டிய சைக்கிளில் பேரணி சென்றனர். நேற்று, நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன், திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் ஆகியோர் நெய்வேலி பகுதியில் சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.

Advertisment

அதேபோன்று செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், இளைஞரணி ஆனந்தன் தலைமையில், சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்தார். செஞ்சி பேருந்துநிலையத்தில் இருந்து துவங்கிய பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனையொட்டி ஊர்வலத்தை துவக்கிவைத்த மஸ்தான் மற்றும் தலைமை தாங்கிய ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது செஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

petrol price hike
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe