Advertisment

பார்கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்கான தடையை நீக்க கோரி வழக்கு

mm

Advertisment

மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், " தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 28 ஆம் தேதி நடக்கிறது. அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவுப்படி, இந்த தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனு தாக்கல் செய்து அதில் தகுதி பெற்ற வேட்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க கோரும் துண்டு பிரசுரங்கள், என்னை தேர்வு செய்தால், என பல தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது கூடாது. அதே போல் சமூக வலைதளங்களில் தங்களுக்கு வாக்களிக்கும் படி தகவல் பரப்புவது உள்ளிட்ட எவ்விதமான விளம்பரங்களும் மேற்கொள்ள கூடாது என தமிழ்நாடு புதுச்சேரி தேர்தல் விதிமுறை சட்டம் 2018 ன் படி உத்தரவிட்டார்.

இந்த தடையால் பார் கவுன்சில் உறுப்பினர் தேர்வுக்காக வாக்களிக்க உள்ள வழக்கறிஞர்களுக்கு தகுதியான வேட்பாளர் யார் என தெரியாமல் போய்விடும். மேலும் இந்த தடை, அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் வெளியிடுவது, சமூகவலை தளங்களில் ஆதரவு கோருவது உள்ளிட்ட. பிரசாரத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விதித்துள்ள தடையை நீக்கி அல்லது ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

Advertisment

இந்த மனு இன்று நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது போது, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குற்ற பின்னணி, குற்றவியல் வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் பார்வைக்காக வழங்கும் படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

barrier demanding election campaign Removal
இதையும் படியுங்கள்
Subscribe