தமிழகத்தில் ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்துவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில்,

Advertisment

railway

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அண்மையில் மதுரை கள்ளிக்குடி ரயில்வே பாதையில் தமிழ் தெரியாத வடமாநிலத்தை செர்ந்தஸ்டேஷன் மாஸ்டரால் நடக்கவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில்தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டுரயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை கொண்டுவர வேண்டியதின் அவசியத்தை கொணருவதாக உள்ளது. பெரும்பாலும் ரயில்வே தேர்வுகள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியிலேயே எழுதப்படுகிறது எனவே வடமாநிலத்தை சேர்ந்தவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். தமிழகத்தில் பணியாற்றும் மொத்த ரயில்வே ஊழியர்களில் 15 முதல் 20 சதவிகித ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் என முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தமிழ்மொழி தெரிவதில்லை இதனால்தான் மதுரையில் இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது எனவே தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நிஷாபானு தாண்டபானி அமர்வு இதுகுறித்து தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.