ADVERTISEMENT

மொபைல்-ஆப் அல்லது வெப்சைட் மூலம் மது விற்பனை கோரி வழக்கு! -மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!

10:52 PM May 13, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

டாஸ்மாக் மதுபானங்களை விற்க மொபைல்-ஆப் அல்லது வெப்சைட் உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


இதுதொடர்பாக, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்குபவர்களுக்கு உரிய ரசீது அளிக்கப்படுவதில்லை. மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களில் பதுக்கப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையும் நடைபெறுகிறது. பள்ளி மாணவ, மாணவியர்கள் கூட மது அருந்துவதை காண முடிகிறது. இதனைத் தவிர்க்க, கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்.


அதுபோல், மது விற்பனை செய்ய மொபைல்-ஆப் மற்றும் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும். மதுபானக் கடைகளில் ரொக்க விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதை மறைத்துள்ளார். மேலும் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட மனுதாரர் கேட்க முடியாது. அதனால், மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.


இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, மனுதாராருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT