Advertisment

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்; தலைமைச் செயலாளர் ஆலோசனை 

The case of counterfeiting liquor; Chief Secretary Advice

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அறிவுறுத்தல்களையும் தலைமைச் செயலாளர் ஆலோசனையில் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை ஒன்றை அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment
kallakurichi TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe