Advertisment

ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மூலம் இழப்பீடு கோரி வழக்கு!

Case for compensation for curfew workers

ஊரடங்கால் வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. நிறுவனம் மூலம் இழப்பீடு வழங்கக்கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு இ.எஸ். ஐ. நிறுவனம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி திருவொற்றியூரைசேர்ந்த வழக்குரைஞர்கள் எஸ்.அம்பிகைதாஸ் மற்றும் க. சிவகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

அதில், இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் இணைந்து ஈவுத் தொகையை செலுத்தி வரும் தொழிலாளர்களை வேலை இழந்தவர்களாகக் கருதி ‘அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’திட்டத்தின் கீழ் 25 சதவீத மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவும்,மேலும் தற்போது ஊரடங்கு தொடர்வதால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதொழிலாளர் பட்டியலின்படிஇழப்பீட்டு நிவாரணத்தைஎவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2018- 19 -ம் நிதியாண்டில் ரூ.27,313 கோடி ஈவுத் தொகையாக தொழிலாளர்கள்மற்றும் நிறுவனங்கள் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இ.எஸ். ஐ. நிறுவனம்ரூ.11,048 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதனடிப்படையில் இத்திட்டத்தில் இணைந்துள்ள சுமார் 3.5 கோடி தொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் விசாரித்து,இ.எஸ்.ஐ. நிறுவனம் மே மாதம் 27-ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

highcourt corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe