Skip to main content

குரூப் 1 தேர்வவை ரத்து செய்யக்கோரிய வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு!!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

குரூப் ஒன் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த குரூப் ஒன் தேர்வை 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் 9050 பேர் மெயின் தேர்விற்கு தகுதியாகினர். ஆனால் இந்த தேர்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், குரூப் ஒன் தேர்வே குளறுபடிகளுடன் நடந்துள்ளதாகவும் எனவே இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

 Case for canceling Group 1 examination ... Judgment Adjournment !!


கடந்த 13 ஆம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டது. இது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என டிஎன்பிஎஸ்சி சார்பில் முறையிடப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் போட்டி தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து சரியான விளக்கம் தேவை என தெரிவித்து டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய வழக்கின் விசாரணையில்  தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்தும் எதிர்மனுதாரர் தேர்வில் வெற்றிபெறவில்லை எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படிடி என்பிஎஸ்சி தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதில் பாதிக்கப்பட்ட ஒருவரருக்கு தீர்வு கிடைத்திருக்கும் நிலையில் இதை பொதுநல வழக்காக ஏற்று ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளுக்கும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.