Published on 29/08/2022 | Edited on 29/08/2022

சென்னை, தி.நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரை, ரூ.5 கோடி பணம் பெற்று ஏமாற்ற முயன்றது தொடர்பாக, கடந்த 20-ஆம் தேதி 12 பேர் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் புகாரின் பேரில், ஆரோக்கியராஜ், அரவிந்த், அஃப்ரோஸ் அஜய், விஜயபாண்டி, நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இவர்களில் நாகேந்திரன், கோயம்புத்தூர் சிறையில் காவலராகப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சரவணனைக் கடத்துவதற்கு உடந்தையாக இருந்த பெண் மருத்துவர் அமிர்தா ஜூலியானா-வை தி.நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.