Advertisment

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் காட்டிய கட்சிகளை தடைசெய்யக்கோரி வழக்கு!!

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழகம்வந்த மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விடுதல் மற்றும் வருகைக்கு எதிராக வசனங்களை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளை தடைசெய்யக்கோரிய வழக்கில், வழக்கில்தொடர்புடைய அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மதுரையை சேர்ந்த முகமது என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், போராட்டத்தில் தேசத்தை துண்டாடும் வகையில் பிரதமர் மற்றும் ஆளுநருக்கு கருப்பு பலூன் காட்டி எதிர்ப்பு தெரிவித்த திமுக, மதிமுக, நாம்தமிழர், விடுதலை சிறுத்தைகள்,திராவிடர் கழகம்,தமிழ் புலிகள், மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடத்திய கருப்பு பலூன் போராட்டத்தினால்தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் திட்டங்கள் வந்து சேரவில்லை. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்த நிலையில் இந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.

இதனைவிசாரித்த உயர்நீதிமன்றமதுரை கிளை இந்த வழக்கில் குறிப்பிப்பட்டுள்ள கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

May 17 mdmk naam thamizhar gobackmodi modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe