Advertisment

தாய், மகளுக்கு பாலியல் தொல்லை - பாஜக நிர்வாகி மீது வழக்கு!

case on BJP executive

Advertisment

சென்னை எருக்கஞ்சேரியில் தாய் மற்றும் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெரம்பூர் கிழக்கு பகுதி பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருக்கும்பார்த்தசாரதி (55), தாய் மற்றும் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு, மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடைபெற்றுவருகிறது.இதேபோல், மயிலாடுதுறையில் பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்ததற்காக சிறுமிகளின் தந்தை மற்றும் உறவினர்கள் மீது கத்திக் குத்து நடத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மகளின் தோழிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது. தஞ்சை மாரியம்மன் கோவில்வெள்ளாளசெட்டி தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (38),அங்குள்ள தனியார் பேட்டரி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.அதேபோல் தஞ்சை தெற்கு அதிமுகஇளைஞர், இளம்பெண்பாசறை தலைவராகவும் உள்ளார். திருமணமான இவருக்குமகள் இருக்கும் நிலையில், பள்ளியில் படிக்கும் மகளின் தோழிக்கு மகள் அனுப்புவது போல் வேல்முருகன் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமியின் வீட்டிற்கு அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி தொடர்ந்து அவருக்குப் பாலியல் தொல்லை தந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

admk sexual harassment Thanjai
இதையும் படியுங்கள்
Subscribe