/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 1_0_8.jpg)
கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தஅய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "உரிய விதிகளை வகுக்கும்வரை கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை எச்சரிக்கைசெய்ய வேண்டும். அதிக வட்டி தருவதாகக் கூறி கேரளாவில் ரூபாய் 100 கோடிவரை மோசடி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)