Advertisment

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

po6

Advertisment

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பானது தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடர்புடையாகவும்; ஆயுத கடத்தல் போன்றவற்றில் தொடர்புடையதாகவும், அந்த அமைப்பின் மீது கேரளாவில் 106 மதக் கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த அமைப்பை தடை செய்யக்கோரி இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரான கோபிநாத் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

2011 மும்பை குண்டுவெடிப்பு, 2012 பூனே குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக உளவு துறை தெரிவித்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா ஆனர்ஜி, நீதிபதி ப்பி.ட்டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு அமைப்பை தடை செய்வது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்றும், மத்திய அரசின் உள்துறையை அணுகவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Popular Brand of India
இதையும் படியுங்கள்
Subscribe