Skip to main content

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு... ஆஜரான 3 ஆசிரியைகள்... தொடர்ந்து 2 பேர் தலைமறைவு!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

case against Sivasankar Baba ... 3 teachers present ... 2 people go missing

 

முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கைப் போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரை விசாரிப்பதற்கான சம்மன் கொடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 17ஆம் தேதி கேளம்பாக்கம், பழனி கார்டனுக்குச் சென்ற நிலையில் காயத்திரி, பிரவீனா உள்ளிட்ட ஆசிரியைகள் 5 பேரும் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின் 5 ஆசிரியைகளின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டது.

 

இந்நிலையில், நேற்று (20.07.2021) சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான 3 ஆசிரியைகளின் வாக்குமூலங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் பதிவு செய்துகொண்டனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என 3 ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 ஆசிரியைகள் தொடர்ந்து தலைமறைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.