ADVERTISEMENT

செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து!

06:13 PM Aug 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகத் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மூன்று வழக்குகள் செந்தில்பாலாஜி, அவரது உதவியாளர்கள், அவரது நண்பர்கள் உள்ளிட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. அந்த மூன்று வழக்குகளில் நான்குபேர் மீது ஒரு வழக்கும், 37 பேர் மீது 2 வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. செந்தில்பாலாஜி, ராஜ்குமார், சண்முகம், அசோக்குமார் ஆகிய நான்கு பேர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது சண்முகம் தரப்பில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது எனவும், அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய காலஅவகாகம் வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT