தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தொடரப்பட்டவழக்கினைசென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.பணம் கிடைத்துவிட்டால் சிலர் சமரசமாக போக விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனைஎதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கைதொடர்ந்து நடத்தலாம் என உயர்நீதிமன்றத்திற்குஉத்தரவிட்டுள்ளது.