k

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேசனில் பணியிலிருந்த பெண் போலீசை தாக்கியதாக டிஎஸ்பி டிரைவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேசனில் போலீஸாக பணியாற்றி வருபவர்நவமணி (28) கடந்த ஓராண்டாக பணியில் உள்ளார். கணவரை இழந்த இவர் துறையூர் புதிய ஹவுசிங் யூனிட் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

Advertisment

Advertisment

இந்த நிலையில் முசிறி டிஎஸ்பியின் டிரைவர் செல்லதுரையுடன், நவமணி சக காவலர் என்கிற முறையில் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில் திடீர் என போலீஸ் நவமணி காவலர் செல்லதுரையிடம் பேசுவதை தவிர்த்தும், செல்போனில் கூப்பிட்டாலும் நவமணி எடுப்பதில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் செல்லதுரை குடி போதையில் உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளார், அங்கு பணியிலிருந்த நவமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திடீரென காவலர் நவமணியை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஸ்டேஷனில் இருந்த மற்ற காவலர்கள் நவமணியை காப்பாற்றி ஒரு அறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நவமணி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.

தன்னுடன் பணியாற்றும் சக பெண் போலிஸ் மீதே போதையில் தகராறு செய்த போலிஸ் டிரைவர் பிரச்சனைதான் தற்போது திருச்சி மாவட்ட போலிஸ் மத்தியில் பரபரப்பு பேச்சாக உள்ளது.