இருக்கன்குடி மாரியம்மன் கோவில் குறித்து பொய்யான தகவல்!  அவதூறு பரப்பியவர் மீது வழக்கு!     

Case against person who spread defamation about Mariamman temple

சாத்தூரை அடுத்துள்ள இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவில்தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு பல்வேறு சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் திருவிழா கொண்டாடி வரும் நிலையில், மாடேஸ்வரன் என்பவர்இத்திருக்கோவில் குறிப்பிட்ட சமுதாயம் ஒன்றின் உறவின்முறைக்கு பாத்தியப்பட்டது என நாளிதழ் ஒன்றில் விளம்பரம் தந்து, பொய்யான செய்தியைப் பரப்பி அவதூறு செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து,இந்து சமய அறநிலையத்துறைஉதவி ஆணையரும், இக்கோவிலின் செயல் அலுவலருமான கருணாகரன் அளித்த புகாரின் பேரில்,சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் கெட்ட நோக்கத்துடனும் நடந்துகொண்டதாக மாடேஸ்வரன் மீது இருக்கன்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.

complaint police temple
இதையும் படியுங்கள்
Subscribe