அமைச்சரின் மைத்துனருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு... நீதிமன்றம் உத்தரவு!

The case against the minister's brother-in-law... Court verdict!

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மைத்துனர் அரசு பணிகளில் தலையிடுவதை தடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் மைத்துனர் கனகசபை என்பவர் நெல்கொள்முதல் நிலையத்தில் தங்களுக்கு வேண்டியவர்களை பணியமர்த்துவதாகவும், மிரட்டல் விடுவதாகவும், இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள வாக்கூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு உரிய பாதுக்கப்பு வழங்க வேண்டும் என பட்டுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக கடலூர் எஸ்.பி, டி.என்.எஸ்.சி நிர்வாக இயக்குநர், தொழிலாளர் நல ஆணையர் ஆகியோர் பதிலளிக்கஉத்தரவு பிறப்பித்துள்ளது.

Cuddalore highcourt
இதையும் படியுங்கள்
Subscribe