Case against Minister Ponmudi Petition to set aside the order

தமிழ்நாட்டில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Advertisment

விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்திருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், இந்த வழக்கை தாமே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.