அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Case against Minister KC Veeramani dismissed

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிரானவழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி, ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தன் நிலத்தை அபகரித்துள்ளதாகவும், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரும், ஜெயபிரகாஷ் என்ற அவருடைய தொழில்முறை நண்பரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதுசம்பந்தமாக, முதல்வருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனமனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர்புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரியவந்தது.இதுபோன்ற மனுவை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே,அமைச்சருக்கு எதிராக மனுதாரர்,தனிப்பட்ட முறையில் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் விதமாக, இந்த மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று வாதிட்டார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

highcourt minister kc veeramani
இதையும் படியுங்கள்
Subscribe