Case against Meera Mithun in seven sections!

Advertisment

பட்டியலின் சமூகத்தினரை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று (07/08/2021) புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், "நடிகை மீராமிதுன் ட்விட்டரில் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாக பேசி வீடியோ பதிவைப் பதிவிட்டுள்ளார்" என புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் பேசியதாக கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடிகை மீராமிதுன் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.