Advertisment

ஜிப்மர் மருத்துவமனையின் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து வழக்கு!

Case against Jipmar Hospital's holiday notification

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி ஜிப்ம்ர் மருத்துவமனைக்கும் ஜனவரி 22 ஆம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puducherry Chennai jipmer holiday
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe