
சமூக ஆர்வலரான ராஜபாளையம் வட்டம் திருவேங்கிடபுரத்தைச் சேர்ந்த குருசாமி, காளவாசலில் ஸ்ரீஈஸ்வரி ஜெராக்ஸ் பொது சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் கோபாலபுரம் ஊராட்சி மன்றம் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, கோபாலபுரம் ஊராட்சி மன்றத் தலைவி சுதாவின் கணவர் ஜெயகுமார், ஸ்ரீஈஸ்வரி பொது சேவை மையத்துக்கு நேரில் சென்று, “எங்கிட்ட மோதாத... உன்னை அரட்டுவதெல்லாம் எனக்கு கேவலமான விஷயம்... என்னால்தான் உனக்கு அழிவு...” என்று மிரட்டியிருக்கிறார். கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் குருசாமி அளித்த புகாரின் பேரில், ஜெயகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.