சேலத்தில் கோயில் குருக்களைஆபாச வார்த்தையால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக திருத்தொண்டர் சபை நிர்வாகி மீதுகாவல்துறையினர்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் சொர்ணாம்பிகை தெருவைச் சேர்ந்தவர் தங்கபிரசன்ன குமார் (33). இவர், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் குருக்களாக உள்ளார். கடந்தநவ. 16ம் தேதி இரவு, கோயிலில் பணியில் இருந்தபோது திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்என்பவர், கோயில் குருக்களை ஆபாசமாக திட்டியதோடு, கொலைமிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தங்கபிரசன்ன குமார் சேலம் நகரக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருத்தொண்டர்கள் சபை நிறுவனர்அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளகாவல்துறையினர்இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.