Advertisment

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து வழக்கு!

case against   Former minister Natham Viswanathan's victory!

Advertisment

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் திமுக சார்பில் ஆண்டி அம்பலமும் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட11, 932 வாக்குகள் கூடுதல் பெற்று நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.

case against   Former minister Natham Viswanathan's victory!

இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாகத்தேர்தல் செலவு செய்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயோ தேர்தல் ஆணையம் மற்றும் எம்.எல்.ஏ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

natham viswanathan admk Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe