தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
'ஆபாசமாகத் திட்டுதல்', 'கலகம் செய்யத் தூண்டிவிடுதல்' ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் திமுக எம்.பிதயாநிதிமாறன், ஆ.ரசா எம்.பி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் லியோனி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நேற்று,அதிசையா, ராஜலட்சுமி என்றபெண் வழக்கறிஞர்கள்கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீதும்,தயாநிதிமாறன் மீதும்மத்திய குற்றப்பிரிவினர்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.