Published on 12/11/2021 | Edited on 12/11/2021

இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்துள்ளது.
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. சிலர் அவரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்த பா.ரஞ்சித் தரப்பு வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவலையே தான் கூறியதாக பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கருத்தில் கொண்ட நீதிபதி, பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.