Advertisment

13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்; சிக்கிய கட்டடத் தொழிலாளி

Case against construction worker who made 13-year-old child pregnant

சேலத்தில்கட்டடத்தொழிலாளியின் வக்கிரத்தால் 13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ஞானமூர்த்தி (39). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.அதே பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு ஞானமூர்த்தி அடிக்கடி சென்று வந்தார். அந்த நண்பருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ஞானமூர்த்தி அடிக்கடி நண்பரின் வீட்டுக்குச் சென்று வந்ததாலும், அப்பாவின் நண்பர் என்பதாலும் அந்தச் சிறுமியும் அவருடன் அப்பாவியாக நெருங்கிப் பழகி வந்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், டிச. 4ம் தேதிசிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். பெற்றோர் உடனடியாக சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். இதில் அந்தச் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர் விசாரித்ததில்சிறுமியின் கர்ப்பத்திற்கு ஞானமூர்த்திதான் காரணம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சேலம், சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில்ஞானமூர்த்தி மீதுகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

child police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe