Case against AIADMK including Adirajaram involved in the struggle!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம்லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியபோது எம்எல்ஏ விடுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் நேற்று (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள்மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

Advertisment

Case against AIADMK including Adirajaram involved in the struggle!

அதிமுகமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் இருந்து ரூபாய் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹார்டு டிஸ்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகலஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Case against AIADMK including Adirajaram involved in the struggle!

இந்நிலையில், இந்த சோதனையைக் கண்டித்து வேலுமணியின் ஆதரவாளர்கள், அதிமுகவினர் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் இருத்தல்,நோயைப் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment