Case against AIADMK former minister budhichandran

உதகையில் தேயிலை தோட்டத்தைக்கேட்டு மிரட்டியதாக அதிமுகமுன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. புத்திசந்திரன் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவருக்குமஞ்சூர் என்னுமிடத்தில்சொந்தமாக தேயிலை தோட்டம் இருக்கிறது. இந்நிலையில், இவரதுதோட்டத்திற்குஅருகில் ஓய்வுபெற்ற கூட்டுறவு மேலாளர் ராஜூவுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் ராஜூ தேயிலை பயிரிட்டுவிவசாயம் செய்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தேயிலை தொழிற்சாலை தொடங்க உள்ளதாகக் கூறி ராஜூவின் இடத்தைக் கேட்டு மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அவர் ராஜூவின் தோட்டத்தைச் சேதப்படுத்தியதாகவும்கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜூ முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது மஞ்சூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.