Advertisment

பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு

Case against 8 people who gambled with money

பெருந்துறை, அந்தியூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருந்துறை அடுத்த துடுப்பதி பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் துடுப்பதி பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (32), கணேசன் (52), வெங்கடாசலம் (59), வடிவேல் (52), கிரி என்கிற சென்னியப்பன் (65) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisment

இவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு மற்றும்பணம் ரூ. 700 கைப்பற்றப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல் அந்தியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தியூர் அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியில் சூதாடிக் கொண்டிருந்த முருகன் (49), மயில்சாமி (35), ஆறுமுகம் (49) என்போர் மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe