Case against 7 people for stealing scrap metal worth Rs. 2 lakhs.

Advertisment

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் (26). இவர், ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

அந்த கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இரும்புப் பொருட்கள், பெயிண்ட் டிரம்கள் என 5 டன் எடையிலான பழைய இரும்புப் பொருட்கள் நிறுவனத்தின் கிடங்கில் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கிடங்கில் ராஜேஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்த பழைய இரும்புப் பொருட்களை அலாவுதீன்பாஷா என்பவர் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சுசீந்திரன் கடந்த 16ம் தேதி கிடங்குக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த5 டன் பழைய இரும்புப் பொருட்களை காணவில்லை. விசாரணையில், பழைய இரும்புப் பொருட்களை வாங்கிச் செல்லும் அலாவூதீன் பாஷா, வாட்ச்மேன் ராஜேஷ் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் ஒரு வேனில் 5 டன் பழைய இரும்புப் பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Advertisment

இதுகுறித்து சுசீந்திரன் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் நேற்று புகார் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அலாவுதீன்பாஷா, ராஜேஷ் மற்றும் இரும்புப் பொருட்களை திருடிச் சென்ற 5 பேர் என 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.