ராஜபாளையம் தாலுகா, தளவாய்புரம், முகவூரைச் சேர்ந்தவர் முதியவர் நல்லமுத்து. தளவாய்புரம் காவல்நிலையத்தில் இவர் அளித்த புகாரில் ‘என் வீட்டிற்கு அருகே வசிக்கும் திருநங்கைகள், இரவு நேரத்தில் மது போதையில் கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கிறார்கள். ஆண் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து தகாத முறையில் நடந்துகொள்கிறார்கள். இதனை நான் தட்டிக் கேட்டதால், என்னையும் என் மகன் முத்துமாரியப்பனையும், மருமகள் தங்கேஸ்வரியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு, அடிக்கவும் செய்தார்கள். என் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள் அடித்ததால், எனக்கு கன்னமும் நெற்றியும் வீங்கிவிட்டது. நான் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தளவாய்புரம் காவல்நிலையம், திருநங்கைகளான தாமரை, ரமா, ஜெயா, கலைச்செல்வி உள்ளிட்ட ஆறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.