Advertisment

தனிமைப்படுத்தியதை மீறி வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு!!

 Case against 40 people who went out of their way to isolate

தமிழகத்தில் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனாபாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் நேற்று 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன.அதேபோல் நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டாலே, பரிசோதனை செய்து கொண்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தார் தனிமைப்படுத்தப்படுவர்என்ற ஒரு அறிவிப்பையும்வெளியிட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில்சென்னை மாநகராட்சியில் பலர் அவரவர்வீடுகளில்தனிமைப்படுத்தப்பட்டுள்ளநிலையில், வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் இதுவரைவிதிகளை மீறி வெளியே சுற்றியதாக40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள்வீட்டைவிட்டு வெளியே சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். வெளியே செல்பவரோடுதொடர்பில் உள்ளவர்கள் மீதும்தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisment

Chennai corona virus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe