நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்திலும் மாணவர்கள் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கிட்டத்தட்ட 54 அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்கள் அங்கே எழுப்பப்பட்டது. இரவு 9 மணிவரை இந்த போராட்டம் நடைபெற்றது.

Advertisment

protest

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம் கிருஷ்ணாஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இந்த போராட்டத்தில்கலந்துகொண்ட திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சட்டவிரோதமாக கூடுதல்,சென்னை காவல் சட்டம் என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment