தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிபல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரப்பயணத்தைத்தொடர்ந்து நடத்திவருகிறார். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்குச் சென்றபோது, முதல்வரின்காரைபின்தொடர்ந்து சென்ற (Convoy) காரில்அவரது கட்சியினர் அணிவகுத்துச்சென்றனர். அப்பொழுது ஏற்பட்டவிபத்தில்இரண்டு கார்கள்சிக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்றபகுதியில்முதல்வரின் கார்சென்றபோது அவரது காரைபின்தொடர்ந்து கட்சியினர் கார்களில்சென்றனர். அப்பொழுது சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கார் ஒன்று மோதி நின்றது.பின் வந்தவாகனங்கள் மிகவும் வேகமாக வந்ததால் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்யாருக்கும் காயம்ஏற்படவில்லை என்றாலும் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தபோலீசார்இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மாடு ஒன்று குறுக்கேவந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான வீடியோகாட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.