சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து பேருந்தை பின்தொடர்ந்து வந்த 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேததமோ, காயமோ ஏற்படவில்லை. இப்படி 5 கார்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதில் சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.